செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உலகத்திலேயே துக்ளக் ஆட்சி அப்படி என்று பார்த்தால்… திமுக ஆட்சி தான் சொல்லலாம். திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு, திராவிடத்தையே இழுக்கு படுத்துகின்ற வகையில் தான் இன்றைக்கு அவர்களின் செயல்பாடுகள் இருக்கிறது. மற்ற மாநிலங்களான அஸ்ஸாம், கர்நாடகா, வட மாநிலங்களில் பொதுவாகவே புது பேருந்துகள் மகளிருக்காக….
அந்த பேருந்தை விட்டு அதன் அடிப்படையில் திட்டத்தை நல்ல விதமாக துவக்கி இருந்தால் அதை பாராட்டலாம். ஆனால் பழைய பேருந்துக்கு முன்னாடி மட்டும் பெயிண்ட் அடித்து விட்டு, சைடுலையும் பெயிண்ட் அடிக்காம பார்க்கும் போது எல்லா பேருந்திலும் ஏறுகின்ற வசதி பெண்களுக்கு இருக்கா? அப்படியே பார்த்தால் கூட ஒரு அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கு ஒரு பிங்க் பஸ் என்றால் எப்போது வரும், 10 மணிக்கு அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமென்றால்…
குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து வருமா ? இருக்கிற பேருந்திலேயே பத்து சதவீதம் கூட பின் கலர் முன்னாடி அடித்த பேருந்துகள் கிடையாது. அப்படி இருக்கும்போது பெண்களை ஏமாற்றுகின்ற திட்டமாகத்தான் இந்த திட்டத்தை இலவச விலையில்லா பயணம் என்றது பார்க்க முடிகிறதே, ஒழிய இது மோசடியான திட்டம். அதுவும் பெயிண்ட் அடித்தது தமிழ்நாட்டினுடைய மானம் கப்பல் ஏறுகின்ற அளவிற்கு திமுக செய்திருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரிய விஷயமாக இருக்கிறது என தெரிவித்தார்.