Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மெதுவா போங்க… தட்டிக்கேட்ட அண்ணன், தடுக்க வந்த தம்பியின் மண்டையை உடைத்த இளைஞர்கள்..!!

 பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்களை தட்டிக்கேட்டதால்  இந்து முன்னனி நகரச் செயலாளர் மற்றும் அவரது சகோதரர் கடுமையாக தாக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்துள்ள மணவாளநகர் ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் சூர்யா. இவருக்கு வயது 23.. திருவள்ளூர் நகர இந்து முன்னணி செயலாளராக இருக்கிறார்.. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 10ஆம் தேதி) இரவு ஜல்லிமேடு பகுதியில் சூர்யா சாலையில் நின்றுகொண்டிருந்த போது, 5 பைக்குகளில் இளைஞர்கள் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து சென்றனர். இதனைக்கண்ட சூர்யா சத்தம்போட்டு அவர்களிடம் பைக்கை மெதுவாக ஓட்டும் படியும், இங்கு குழந்தைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், பைக்கில் திரும்பி வந்து சூர்யாவை சரமாரியாகத் அடித்துள்ளனர். அப்போது அதை பார்த்து  தடுக்க வந்த அவருடைய சகோதரர் சிவா என்பவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து தடுத்து அவர்கள் இருவரையும் மீட்டு, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காகை அனுப்பிவைத்தனர். உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கப்பட்டதால் சிவாவுக்கு மண்டை உடைந்து 12 தையல்கலும், சூர்யாவிற்கு தலையில் 3 தையல்களும் போடப்பட்டன.

தற்போது அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சூர்யாவின் தாய் கிருஷ்ணவேணி அளித்த புகாரின்பேரில் மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், இதில் தொடர்புடைய 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |