KGF 2 படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்…!!
கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ஹிட் ஆனது. மேலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகமான KGF 2 மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது.
இந்தநிலையில் கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் Rebuilding an Empire என்ற வாசகத்துடன் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு மேலும் துண்டியுள்ளது.
https://twitter.com/Vinesh57024462/status/1208399988939788293