Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்… ஹீரோயினாக நடிக்கும் பிரபல நடிகை… யார் தெரியுமா?…!!!

‘தி கிரேட் இந்தியன் கிச்சன் ‘ தமிழ் ரீமேக்கில் பிரபல நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

மலையாள திரையுலகில் கடந்த மாதம் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . தற்போது இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமையை இயக்குனர் கண்ணன் கைப்பற்றியுள்ளார் . மேலும் இந்த படத்தை அவரே இயக்கவுள்ளார் . அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க உள்ளது .

Aishwarya Rajesh to team up with Sivakarthikeyan once again? |  Entertainment News,The Indian Express

சமீபத்தில் இயக்குனர் கண்ணன் அளித்த பேட்டியில் ஒரே நேரத்தில் இருமொழிகளிலும் எடுக்கப்படுவதால் தமிழ்-தெலுங்கில் புகழ்பெற்ற நடிகையை இந்த படத்தில் நடிக்க வைக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |