Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு அனுப்பாத இவரு…. இனி தமிழகத்திற்கு தேவையில்லை…. சரமாரியாக விளாசிய டி.ஆர்.பாலு….!!!!

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கிய நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்ட தொடரில் பேசிய ஆளுநர் நீட் போன்ற நுழைவுத்தேர்வு தேவையற்றது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நீட் விலக்கு குறித்த மசோதாவை உள்துறை அமைச்சருக்கு அனுப்பாத ஆளுநர் தமிழகத்திற்கு தேவையில்லை என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவியை சரமாரியாக சாடியுள்ளார்.

மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அதனை தொடர்ந்து தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் தமிழக அரசு நிறைவேற்றிய அந்த தீர்மானத்தை இதுவரை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என்று தெரிகிறது. எனவே இப்படிப்பட்ட ஆளுநர் நமது தமிழகத்திற்கு தேவை இல்லை என்று கூறி சரமாரியாக சாடியுள்ளார்.

Categories

Tech |