தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களே குற்றவாளியாக இருக்கக்கூடிய துயரமான சூழல் தற்போது நிலவி வருவதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கடந்த 19ஆம் நாள் கரூரை அடுத்த வெண்ணமலை பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் தொந்தரவால் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிகழ்வு தமிழகத்தையே உலுக்கிய நிலையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்யலர்களை சந்தித்து பேசிய அவர் பாலியல் துன்புறுத்தலால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது என தெரிவித்த அவர் காவல் துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்கும் ஒரு ஆட்சியாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.