தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்தும் தமிழக அரசு செய்துள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழக முதல்வர், இந்தியாவிலே நாம் தான் அதிகமான பரிசோதனை செய்துள்ளோம். மொத்த பாதிப்பு 36 ஆயிரத்து 841, பரிசோதனை நிலையங்கள் 77 இருக்கு. சிகிச்சை பெற்ற்று வருபவர்களின் எண்ணிக்கை 17179. நேற்றைய தினம் மட்டும் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1008 . இதுவரைக்கும் குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 333 பேர் . கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 326 பேர்.
இதுல என்னனா ? ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு, சிகிச்சை பெற்று வாரங்க. பலபேர் மருந்து எடுத்துக் கொண்டு இருக்காங்க. இப்படி இறப்பவரின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கு. கேன்சர் வந்தவங்க, சர்க்கரை நோய் இருக்கிறவங்க, இருதய நோய் இருக்கிறவங்க, சிறுநீரக நோய் இருக்கிறவங்க இப்படி பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றவர்கள் தான் இறப்பு அதிகமாக இருகிறது என்று மருத்துவர்கள் புள்ளி விவரம் கொடுக்கிறார்கள்.

இந்த கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. இந்தியாவிலேயே இறப்பு சதவீதம் நம்ம தான் குறைவா இருக்கோம்.மற்ற மாநிலத்தை விட நமக்கு தான் இறப்பு சதவீதம் குறைவா இருக்கு. நம்மை பொறுத்த வரைக்கும் யாரெல்லாம் பாதிக்கப் பட்டுள்ளார்களோ, அவர்களை எல்லாம் பரிசோதனை செய்து குணப்படுத்துவது தான் அரசின் முதல் கடமை.
அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் எங்களுடைய அரசு செய்து வருகிறது. அது மட்டுமல்ல, அரசும் தனியாரும் சேர்ந்து ஆயிரக்கணக்கான படுக்கை வசதிகளை செய்துள்ளோம். சேலம் மாவட்டத்தில் மட்டும் 2,000 படுக்கை வசதி செஞ்சு வச்சு இருக்கோம். சுமார் 5000 பேர் படுக்கையை ஏற்பாடு செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். தமிழ்நாடு முழுவதுமே கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் இருக்கு.

வெண்டிலேட்டர் 3,384 இருக்குது. செவிலியர் புதுசா எடுத்திருக்கிறோம், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களும், ஆய்வக உதவியாளரையும் புதிதாக நியமித்துள்ளோம். நமக்கு தேவையான அளவுக்கு மருத்துவ பணிகள் செய்ய மருத்துவ பணியாளர்கள் இருக்கின்றார்கள் என்று முதல்வர் பேசினார். முதல்வரின் இந்த கருத்து மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கையை பாய்ச்சியுள்ளது.