தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஜூன் 11ம் தேதி விக்னேஷ் சிவன் செய்தியாளர்களை சந்திப்போம் என தெரிவித்திருந்தார். அதன்படி, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜூன் 11 ஆம் தேதி நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதே நாளில் பிரபல நடிகர் சிம்பு ஒரு குட் நியூஸ் சொல்லியிருக்கிறார். அதன்படி மிந்த்ரா பிராண்ட் அம்பாசிடராக சிம்பு இருக்கிறார். இவர் ஜூன் 11ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை ஃபேஷன் பிராண்டுகளில் 50 முதல் 80 சதவீதம் தள்ளுபடி என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#MyntraEndOfReasonSale is LIVE from 11-16th June with 50-80% Off on our favorite fashion brands. Deals so 🔥, can't miss out on 'em. #MyntraInsiders get upto 20% extra off! Download Myntra App & shop NOW#MyntraEORS #IndiasBiggestFashionSale #GoForIt #Ad https://t.co/nowoG4pqiw pic.twitter.com/LrxbSA4oM9
— Silambarasan TR (@SilambarasanTR_) June 11, 2022