நடிகர் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியைப் போல் தமிழில் இந்நிகழ்ச்சியை பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிவருகிறார்.
இது கோடீஸ்வரி விளையாட்டு நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி பெண்களுக்காக பிரத்யேகமாக “கலர்ஸ் தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண் ரூ. 1 கோடி பரிசை வென்று சாதனை படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் கெளசல்யா, காது கேளாத, வாய் பேச முடியாதவர். கோடீஸ்வரி போன்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி ஒருவர் பங்கேற்று ரூ. 1 கோடி பரிசு வென்றதும் இதுவே முதல்முறையாகும் .
https://twitter.com/ColorsTvTamil/status/1217767405138526209