சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்தினம், நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பிறகு நிகழ்ச்சியின் போது நடிகர் பார்த்திபன் மிகவும் சுருக்கமாக பேசிவிட்டு கிளம்பிவிட்டார். நடிகர் பார்த்திபன் பொதுவாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே மிகவும் சுவாரசியமாக பேசுவார். ஆனால் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சுருக்கமாக பேசியதன் காரணமாக பலரும் எதற்காக அப்படி செய்தீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் நடிகர் பார்த்திபன் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, வேற சட்டையில் நேற்று வழக்கமாக விரிவாக பேசும் சட்டையை மாற்றி சுருக்கமாக பேச விருந்தினரில் பலர் வருந்தினர். சில நேரங்களில் சுவாரசியமாக பேசும் போது அது நல் நட்பை இழப்பதற்கு நேரிடுகிறது. தாணுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க நேரிடுகிறது. இன்று மதுரையில் என்றோ எழுதிய கவிதை நினைவில் மதுரையில் மீனாட்சி தான் அழகு பெண்ணே பிரகாரத்தில் நீ இல்லாத போது என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு முன்பாக நடைபெற்ற விழாவில் நடிகர் பார்த்திபன் நானே வருவேன்னு அடம் பிடித்து தான் இன்னைக்கு வந்திருக்கிறேன் என்று கூறினார்.
அவர் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தை தான் அப்படி கூறினார் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகவே தெரியும். அவருடைய இந்த பேச்சு தான் சில நட்பை இலக்க வைத்திருக்கிறது. அதாவது இரவின் நிழல் படத்தை தமிழகம் எங்கும் எடுத்துச் சென்றவர் தாணு. அப்படிப்பட்ட தாணு தயாரித்த படத்தை பொன்னியின் செல்வன் பட வெளியீட்டின் போது நக்கலாக பேசியது கடைசியில் பார்த்திபனுக்கு வினையாக வந்து முடிந்துள்ளது. மேலும் தயாரிப்பாளர் தாணுவுக்கும் தனக்கும் ஏற்பட்ட மனக்கசப்பை தான் அப்படி ஒரு பதிவின் மூலம் பார்த்திபன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
VERSATILE? But
வேற சட்டையில் நேற்று
வழக்கமாக விரிவாகப் பேசும் சட்டையை மாற்றி,சுருக்கமாக பேச-விருந்தினரில் பலர் வருந்தினர்.சுவாரஸ்யமாக பேச விளைய,அது சில நேரம் நல் நட்பை இழக்க நேரிடுகிறது.தானுன்டு தன் வேலையுண்டு என்றிருக்க நினைக்கிறது
இன்று மதுரையில்!என்றோ எழுதிய கவிதை நினைவில்> pic.twitter.com/qWTegDb5tZ— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 6, 2022