Categories
தேசிய செய்திகள்

காதலனை நம்பி ஏமார்ந்த இளம்பெண்…. இதை பாலியல் வன்கொடுமை என்று சொல்ல முடியாது…. வைரலாகும் நீதிபதியின் பதில்…!!

இருவரும் சேர்ந்து செய்த உடலுறவை பாலியல் வன்கொடுமை என்று சொல்ல முடியாது என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ள செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வினை பிரதாப் சிங் என்பவரும் இளம்பெண் ஒருவரும் அங்கீகரிக்கப்படாத ஒரு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். அதன்படி அவர்கள் தாலி எதுவும் கட்டி கொள்ளாமல் 2 ஆண்டுகள் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து உள்ளனர். இப்படியே உல்லாசமாகச் என்ற அவர்களது வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

அதனால் காதலன் பிரதாப் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் காதலி, பிரதாபிடம் நியாயம் கேட்டுள்ளார். அப்போது அவரவர் தரப்பு நியாயத்தை கூறியதால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் காவல் நிலையத்தில் பிரதாப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் அளித்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி, “நீங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒற்றுமையாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளீர்கள். தற்போது நீங்கள் பிரதாப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்று புகார் அளித்துள்ளீர்கள்.

அப்படி அவர் பாலியல் துன்புறுத்தல் செய்திருந்தால் நீங்கள் முன்பே புகார் அளித்து இருக்கலாமே” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய நீதிபதி, பிரதாப் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு ஏன் புகாரை அழைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பாதிக்கப்பட்ட பெண், பிரதாப் தன்னை யாருக்கும் தெரியாமல் ஒரு கோவிலில் நாடக கல்யாணம் செய்து கொண்ட பிறகு தான் குடும்ப வாழ்க்கை தொடங்கினோம். ஆனால் தற்போது அவர் என்னை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று தெரிவித்தனர்.

இதற்கு பின் பேசிய நீதிபதி, இருவர் முழுமனதுடன் சேர்ந்து செய்த உடலுறவை பாலியல் வன்கொடுமை என்று சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |