Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆர்வத்தில் அதை மறந்துட்டோம்… ஆபத்தை அறியாத மக்கள்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏரியில் மீன்பிடித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட ஏரி ஒன்று அமைந்துள்ளது. அந்த ஏரியின் நீரானது விவசாயம் மற்றும் குடிநீர்காக பயன்பாட்டில் உள்ளது. தற்போது ஏரியில் உள்ள தண்ணீர் வற்றி குட்டை போல் மாறியுள்ளது. இந்த ஏரியில் தற்போது மீன் வரத்து அதிக அளவில் காணப்படுகிறது.

இதனால் அருகில் உள்ள கிராம மக்கள் மீன்களை பிடிப்பதற்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாகக் குவிந்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா தொற்றின் பரவல் காரணமாக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்பின் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் கிராமப்புற மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கூறுவது, கிராமப்புற மக்களுக்கு கொரோனா தொற்றின் கட்டுப்பாடுகள் குறித்து  விழிப்புணர்வுவை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |