பிரிட்டனில் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் வெளியில் நடமாடுவதால் பொதுமுடக்கம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் 6 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3 பேர் இங்கிலாந்திலும், 3 பேர் ஸ்காட்லாந்திலும் உள்ளனர். இங்கிலாந்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்ட 3 பேரில் 2பேர் பற்றிய முழு விவரமும் தெரியவந்துள்ளது. அதனால் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அதில் ஒருவருடைய விவரம் தெரியவில்லை.
ஏனென்றால் அவர் தன்னைப் பற்றிய விவரங்களை ஆவணத்தில் முழுமையாக நிரப்பவில்லை. அதனால் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு தொற்று பரவி இருப்பது தெரியாமல் கூட போயிருக்கலாம். இருப்பினும் அவர் வெளியில் நடமாடுவதால் பிரிட்டனில் மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்படும்.
இது குறித்து பேசிய தடுப்பூசிகளின் துறை அமைச்சரான நதிம் ஜஹாவி கூறியதாவது, பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் இதுவரை தங்களது சோதனைக்கான முடிவுகளை பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் அதனை வந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் தங்களது முழுமையான விவரங்களை ஆவணத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை என்னவென்றால், கொரோனா பாதிக்கப்பட்ட அந்த நபர் வெளியில் நடமாடுவதால் பிரிட்டனில் தளர்த்தப்பட உள்ள பொது முடக்கம் மீண்டும் தொடங்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.