பிரான்ஸ் அரசாங்கம் புத்தாண்டை முன்னிட்டு புதிய தடைகளை விதித்துள்ளது.
ஒமிக்ரான் உருமாற்றம் காரணமாக கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் ஐரோப்பிய அரசாங்கம் புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று பிரான்சில் கொரோனா வைரஸ் வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டது. இதனால் ஜனாதிபதி மாக்ரோன் தலைமையில் கொரோனா நிலைமை குறித்த ஆலோசனை கூட்டம் வருகின்ற திங்கட்கிழமை அன்று நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே பிரான்ஸ் அரசு புத்தாண்டு அன்று மக்கள் கூடுவதற்கும், வெளிப்புற நிகழ்வுகளுக்கும் முற்றிலுமாக தடை விதித்துள்ளது. அதேபோல் பொது இடங்களில் வைத்து மது அருந்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. மேலும் புத்தாண்டு அன்று நடைபெறும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.