Categories
சினிமா தமிழ் சினிமா

”நான் பேசிய முதல் காட்சி” 20 ஆண்டுகளுக்கு முன்பு…. நினைவு கூறும் நடிகர் சூரி….!!

20 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் பேசிய முதல் வசன காட்சியை நினைவு கூறும் வகையில் நடிகர் சூரி தனது ட்வீட்_டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நாயகன் சூரி தமிழ் சினிமாவில் கால் பதித்த தருணத்தை நினைவு கூறும் வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் திரைத்துறையில் அவர் பேசிய முதல் வசனத்தை நகைச்சுவை ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது வைரலாகி வருகின்றது. மேலும் 2000_ஆம் ஆண்டு வெளிவந்த “கண்ணன் வருவான் ” படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குனர் சுந்தர்.சி க்கும், கவுண்டமணிக்கும், தனது நன்றியை நடிகர் சூரி அந்த பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |