Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல’ பட நடிகைக்கு புதிய வாய்ப்பு… வெளியானது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.!!

பிக்பாஸ் புகழ் அபிராமி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் அபிராமி. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அபிராமிக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.

Image result for abhirami venkatachalam nerkonda parvai

தற்போது அபிராமி ‘கஜன்’ என்னும் மலேசிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அபிராமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எஸ். மதன் இயக்கும் இப்படத்தை வீடு புரொடக்ஷன் மற்றும் அழகப்பா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் அபிராமியுடன் தெனஸ் குமார், ஜாஸ்மின் மைக்கேல் ஆகியோர் நடிக்கின்றனர்.

https://www.instagram.com/p/B4AJO-aFb1F/?utm_source=ig_web_button_share_sheet

Categories

Tech |