வாங் யாப்பிங் என்ற பெண்மணி விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற பெயரை பெற்று சாதனை படைத்துள்ளார்.
சீனாவில் டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கான கட்டுமான பணிகள் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வாங் யாப்பிங் என்ற பெண் வீராங்கனை விண்வெளித் திட்டத்தில் முக்கிய அதிகாரியான ஜாய் ஜிகாங்-வுடன் இணைந்து பணிபுரிய விண்வெளியில் நடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். இதனால் அந்த பெண்மணிக்கு விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற பெயரானது வழங்கப்பட்டுள்ளது.