திரிஷா நடிப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் திரிஷாவுக்கு அக்காவாக சிம்ரன் நடிக்கிறார் .
‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். இதை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது உருவாகும் இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்ஷன் படமாக தயாராகவுள்ளது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார், அவருக்கு அக்காவாக சிம்ரன் நடிக்கவுள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ‘ராங்கி’ என்று டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது. ராங்கி என்றால் அடங்காத பெண் என்று அர்த்தம் இதற்கு பொருத்தமாக திரிசாவின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.