
இந்நிலையில் இப்படம் பற்றி இயக்குனர் மிஷ்கின் கூறுகையில், சைக்கோ படம் பாருங்கள். கண்டிப்பாக குழந்தைகளும், கர்ப்பிணிபெண்களும் இப்படத்தை பார்க்காதீர்கள். இது ஒரு கொலைக்களமான படமாக உருவாகியுள்ளது. அதனால் சிறு குழந்தைகள் மனதளவில் மிகவும் பயப்படுவார்கள். அதேபோல படத்தில் நான்கைந்து காட்சிகளில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் பயங்கரமாக இருக்கும். மற்றபடி 18 வயது பூர்த்தியடைந்த ஆண்கள், பெண்கள் பார்க்கலாம் என்றார். படம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.