பாகிஸ்தான் நாட்டில் ஜாய்லேண்ட் என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த படத்திற்கு அந்நாட்டு அரசால் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டில் ஜாய்லேண்ட் திரைப்படம் குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.
இந்த படம் சமூக விழுமியங்கள் மற்றும் தார்மீகங்களுடன் ஒத்துப் போகவில்லை என கடந்த 11-ம் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கண்ணியம் மற்றும் ஒழுக்க கேடுகளுக்கு ஊறு விளைவிக்கும் விதமான பல்வேறு கருத்துகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நவ. 18 ஆம் தேதி படம் ரீலிஸ் ஆவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த படம் ஒரு ஆணாதிக்க குடும்ப கதையை மையமாகக் கொண்டுள்ளது.
அந்தப் படத்தின் படி குடும்ப பாரம்பரியத்தை காக்க ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஏக்கம் நிலவ, அவர்களின் இளைய மகன் யாருக்கும் தெரியாமல் ஒரு சிற்றின்ப நடன அரங்கில் இணைந்து கொள்கிறான். அப்போது ஒரு திருநங்கையின் அழகில் மயங்கி விடுகிறான். இதைத்தான் மையமாக வைத்து படத்தை எடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவின் போது முதன்முதலாக திரையிடப்பட்ட பாகிஸ்தான் திரைப்படமும் ஜாய்லேண்ட் தான். இந்த படத்திற்கு அங்கு குயர் பாம் விருது மற்றும் அன் செர்டெய்ன் ரிகார்ட் ஜூரி பரிசு போன்றவைகள் கிடைத்தது. இந்த படம் டொராண்டோ மற்றும் பூசன் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. மேலும் ஆசியா பசுபிக் திரை விருதுகளில் இளம் சினிமா விருதையும் வென்றுள்ளது.