வேலூரில் அமாவாசையையொட்டி மயானக்கொள்ளை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தின் வட மாவட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையை ஒட்டி மயானகொள்ளை திருவிழா நடைபெறும். இதில் ஆண் பக்தர்கள் மண்டை ஓடு, எலும்புத் துண்டு, எலுமிச்சை பழம் உள்ளிட்டவற்றை மாலையாகக் கோர்த்து கழுத்தில் அணிந்த படியும் காளி உள்ளிட்ட பெண் அம்மன் வேடமணிந்து சாமி அம்மன் ஊர்வலம் மேற்கொள்வர்.
அதேபோல் ஊர்வலத்தில் பெண் பக்தர்கள் ஆடு, கோழி உள்ளிட்டவற்றையும், தலையை துண்டித்து அதனை வாயில் கவ்வி கொண்டவாறு பரவசமாக ஊர்வலம் செல்வர். இது வெகு விமர்சையாக நடைபெறும் திருவிழா என்பதால், ஆங்காங்கே காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் இதை முன்னிட்டு வேலூர் பகுதியில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஊர்வலத்தின் முடிவில் அம்மன் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்ட பின் மிளகு, சுண்டல், உப்பு, கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை அம்மனுக்கு படையலிட்டு பின் பக்தர்களுக்கு நிர்வகிக்கப்பட்டது.