கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து விட்டால் ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்த நிலையில் கொரோனாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டுபிடித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கான பரிசோதனை தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 16 இடங்களில் நேற்று வெற்றிகரமாக தொடங்கியது..
இந்தநிலையில், மத்திய அரசு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து விட்டால் ஒரு டோஸ் ரூபாய் 140 க்கு விற்பனை செய்ய இருப்பதாகவும், ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.. இனி விரைவில் நம் கவலை தீரும்.. கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெறட்டும்..