Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் யாருக்கும் எதுவும் ஆகல… “பாதுகாப்பா இருக்காங்க”…. மத்திய அரசு தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்கள் விமான நிலையங்களில் குவிந்து அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பித்து செல்கின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.. அதேபோல இரண்டு கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள்  250 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. இதனை தொடர்ந்து   காபூலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் 85 பேர் மீட்கப்பட்டனர்..

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 150க்கும் அதிகமான இந்தியர்களை பிடித்து வைத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.. காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர்களை கடத்தி சென்றதாக கூறப்பட்டது.. ஆனால் மத்திய அரசு தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.. இதனை தொடர்ந்து விமான நிலையம் அருகே காத்திருந்த இந்தியர்கள் பலரை கடத்தியதாக வெளியான தகவலுக்கு தலிபான்கள் செய்தி தொடர்பாளர் அகமதுல்லா வாசிக் மறுப்பு தெரிவித்தார்..

அதனை தொடர்ந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 150 இந்தியர்கள் காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், ஆப்கானில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஆப்கான் ஊடகங்கள் தகவல் தெரிவித்தன..

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.. மேலும் ஆப்கானில் உள்ள இந்தியர்களை விரைவில் மீட்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது..

Categories

Tech |