மகனை சொந்த தந்தையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் வீராம்பட்டினம் ஊரை சேர்ந்தவர் குமார். குமாரின் மகனான ரஞ்சித் பிரான்சில் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரான்சிலிருந்து ரஞ்சித் பெற்றோரை சந்திக்க வீட்டிற்கு வந்துள்ளார். அன்று முதல் தந்தைக்கும் மகனுக்கும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
எப்போதும் போல் நேற்றும் தந்தை மகன் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபம் கொண்ட குமார் வீட்டில் உள்ள கத்தியை கொண்டு மகன் ரஞ்சித்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் ரஞ்சித். இதுகுறித்து அறியங்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த தந்தை குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.