தனது குடும்பத்தை ரயில் வரும் பாதையில் நிறுத்தி தந்தை ஒருவர் குழந்தைகளுடன் போட்டோ எடுக்கும் காட்சி ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் எசெக்சில் (Essex) இரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருக்கும் அந்த தந்தை, மற்றொரு பாதையில் நிற்கும் தன்னுடைய மனைவி மற்றும் 2 பிள்ளைகளை போட்டோஸ் எடுத்து மகிழ்கிறார்.
அந்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரயில்வே துறை, இன்னும் எத்தனை முறை தான் சொல்வது இரயில் பாதையை கடக்கும்போது இப்படி போட்டோ எடுக்காதீர்கள் என்று, இன்னும் 3 நிமிடங்களில் அவ்வழியாக 80 மைல் வேகத்தில் இரயில் ஓன்று வர இருந்தது கூட தெரியாமல் அவர்கள் போட்டோ எடுக்கிறார்கள், இரயில் பாதையில் நின்று கொண்டு ரிஸ்க் எடுக்காதீர்கள் என்று எச்சரிகை விடுத்துள்ளது.

இந்த காட்சியை ட்விட்டர் பயனாளர்கள் கண்டித்து வருகின்றனர்.. அதில், ஒருவர் மிக அருமையான பெற்றோர்கள் என்று விமர்சித்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
😱 How many times do we need to say it – DO NOT take photos when using a level crossing.
A train was less than three mins away when these people decided to.
🚧Never take a chance on a level crossing❗#LevelCrossingSafety #CrossWithCare #SafetyFirst pic.twitter.com/DiKANV48Xg
— Network Rail (@networkrail) July 22, 2020