Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்றபோது… திடீரென பற்றி எரிந்த கார்… 1 வயது மகளை காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் ஏற்பட்ட சோகம்..!!

சுற்றுலா சென்றபோது திடீரென காரில் தீப்பற்றி கொண்டதால் தந்தை மகள் இருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது

ஸ்விட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். அச்சமயம் திடீரென காரில் தீ பற்றிக் கொள்ள உடனடியாக காரை நிறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து மூன்று வயது மகன் உடனடியாக காரில் இருந்து வெளியேற எந்த காயமும் இன்றி தப்பியுள்ளான்.  ஆனால் ஒரு வயது மகள் காரில் சிக்கிக்கொள்ள அவளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தந்தை.

இதனால் தந்தை மகள் என இருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த உதவிக்குழு ஹெலிகாப்டரின் உதவியுடன் தீக்காயம் ஏற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். திடீரென எதனால் கார் தீப்பற்றி எரிந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |