ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கவாகனம் ஒன்றுடன் ஓன்று மோதி நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள ஆதிதிராவிடர் தெருவில் சாமுவேல்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கமுதியில் உள்ள ஒரு கடையில் புதுப்பட்டியை சேர்ந்த மாரிசாமி(20) காளிசாமி(18), காளீஸ்வரன்(18) மற்றும் முதுவழிவிட்டான்(20) ஆகியோர் வேலை பரந்து வந்துள்ளார். இவர்கள் 4 பேரும் வேலையை முடித்துவிட்டு புதுப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் 4 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் போது எதிரே சாமுவேல் இருசக்கர வேகத்தில் வந்து கொண்டிருந்துள்ளார்.
இதனையடுத்து இவர்களின் இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஓன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் 5 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்கள் 5 பேரையும் மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சாமுவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்த 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்து வந்த கமுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.