Categories
சினிமா தமிழ் சினிமா

சந்திரமுகி 2வில் ஹீரோயினாக ஒப்பந்தமான பிரபல நடிகை… வெளியான புதிய தகவல்…!!!

சந்திரமுகி 2வில் நடிக்க பிரபல நடிகை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு தான் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருக்கிறார்.

ஆனால் இப்படத்தில் ரஜினிகாந்த்திற்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர் தற்போது இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |