Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடைக்குள் இருந்த ஊழியர்… முன்பகையால் வந்த விளைவு… சூறையாடப்பட்ட ஆவின் பால் நிலையம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் முன்பகை காரணமாக ஆவின் பாலகத்தின் ஊழியரை தாக்கிய 3 பேரை சிறையில் அடைத்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள காக்கவேரி பகுதியில் உள்ள சீனிவாசன் நகரில் செல்வா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆவின் பாலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கு கோனேரிப்பட்டியை சேர்ந்த கார்த்திக்(26), ராமகிருஷ்ணன்(26) மற்றும் கல்லூரி மாணவரான குணா(21) ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து செல்வா மற்றும் அவருடைய நண்பர் ஹரிஸ் இருவரும் ஆவின் கடையில் இருந்துள்ளார். அங்கு வந்த கார்த்திக், ராமகிருஷ்ணன், குணா, தீனா, பாஸ்கர் ஆகியோர் கடையில் இருந்த செல்வாவிடம் தகராறு செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது செல்வா மற்றும் அவரது நண்பர் ஹரிஸையும் தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடையில் இருந்த பால் பாக்கெட்டுகள் கண்ணாடி பாட்டில்கள் ஆகிய அனைத்தையும் சேதமாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து செல்வா ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து செல்வாவை தாக்கிய ராமகிருஷ்ணன், குணா, கார்த்திக் ஆகிய 3 போரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பாஸ்கர் மற்றும் தீனாவை தேடி வருகின்றனர்.

Categories

Tech |