கண்ணதாசன் ஒரு கவிஞர் மட்டுமல்ல, பல திரைப்படங்களிலும் கண்ணதாசன் நடித்திருக்கிறார். பராசக்தி கருப்பு சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். முதல் மனைவியின் பெயர் பொன்னம்மா அடுத்த ஆண்டே பார்வதி திருமணம் செய்து கொண்டார். கண்ணதாசன் இறந்துவிட்டார் என்று இவரே பலருக்கு கால் செய்து வதந்தியை கிளப்பி விடுவார். அவர்கள் அழுது கொண்டே வீடு திரும்பி வரும் பொழுது அவரை சிரித்துக்கொண்டே வரவேற்பார். தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர். காமராஜர் அண்ணா எம்ஜிஆர் கருணாநிதி ஆகிய 4 பேரையும் அதிகமாக பாராட்டிய வரும் இவர் தான் விமர்சனம் வைத்தவரும் இவர்தான் .
பெரும் பணக்காரர்களை போல பணம் சம்பாதித்து பிச்சைக்காரனைப் போல நடுத்தெருவில் ஊதாரியாக செலவழித்து இருக்கிறேன் என்பதுதான் இவருடைய வாக்குமூலம். தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி ஆசையாக இருந்தது. அச்சம் என்பது மடமையடா, சரவணப் பொய்கையில், நீராடி மலர்ந்தும் மலராத, போனால் போகட்டும் போடா, எங்கிருந்தாலும் வாழ்க, அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்,
சட்டி சுட்டதடா கை விட்டதடா, போன்ற பாடல் தமிழ் வாழும் காலம் முழுவதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னே தனக்கு இரங்கல் பா எழுதி கொண்டவர் இவர் தான். மிகவும் பிடித்த இலக்கியம் கம்பரமாயணம் தான். பாடல் பாடும் சக்தியை பெற்றதே அதிலிருந்துதான் என்று கூறுவார். இவ்வளவு சிறப்புமிக்க மனிதருக்கு தமிழக அரசு கவியரசர் கண்ணதாசன் என்ற பட்டத்தையும், கண்ணதாசன் மணிமண்டபம் என்ற மணிமண்டபத்தையும் காரைக்குடியில் அமைத்துள்ளது.