இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரேஸ்கார் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். சென்னையில் உள்ள அயனாபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 250 பேருக்கு புதிதாக பணி நியமன ஆணைகள் வழங்கப் பட்டது. இந்த பணி நியமன ஆணைகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். அதன் பிறகு புதிதாக 75 ஆயிரம் பேருக்கும் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக பேசினார். அவர் பேசியதாவது, உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா கடந்த 8 வருடத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகத்தில் உள்ள பல பெரிய பொருளாதரங்கள் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றுடன் போராடி வருகிறது என்பது உண்மைதான்.
100 வருடங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியின் விளைவுகள் 100 நாட்களில் சரியாகாது. இருப்பினும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா முழு முயற்சியுடன் போராடி வருகிறது. இதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு மிகப்பெரியது. மேலும் கடந்த 8 வருடங்களில் பொருளாதார தடைகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சனைகளை குறைத்துள்ளோம் என்று கூறினார்.