Categories
உலக செய்திகள்

இந்தோனேஷியாவில்….. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… “23 பேர் பலி”… 100-க்கும் மேற்பட்டோர் காயம்..!!

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ள  கிழக்கு மாகாணம்  மலுகுவில் இருக்கும் அம்பான் நகரில், நேற்று அதிகாலை திடீரென பெரும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உருவான நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 6. 5 ஆக பதிவானது. இதில் அப்பகுதி முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. அங்குள்ள பல வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததோடு மட்டுமில்லாமல் சில இடங்களில் பெரிய நிலச்சரிவும் ஏற்பட்டது.

Image result for The earthquake in Indonesia has claimed 23 dead .

இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால், 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100-க்கும்  மேற்பட்டோர் காயமடைந்த நிலையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை  அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்பு அமைப்பு   தெரிவித்துள்ளது. மேலும் இந்த நில நடுக்கத்தால்  117 வீடுகள் இடிந்து விழுந்து தரை- மட்டமாகியதாகவும், சுமார் 15,000 மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கபட்டு, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |