கொரோனா தொற்று காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கு மட்டும் மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக மத்திய வெளியுறத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ” COVID19 தொற்றுநோயின் காரணமாகவும் மனிதாபிமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நமது திறன்களைச் சார்ந்துள்ள அண்டை நாடுகளுக்கு பாராசிட்டமால் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றை இந்தியா பொருத்தமான அளவில் ஏற்றுமதி செய்ய உரிமம் வழங்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
மேலும், ” இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் யூகங்கள் அல்லது இந்த விஷயத்தை அரசியல் மயமாக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு ஊக்குவிக்காது” என வெளியுறவுத்துறை கூறியுள்ளது. முன்னதாக, இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு 30 நாடுகள் இதுவரை விண்ணப்பித்துள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன.
இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என இந்திய மருத்துவ ஆரய்ச்சி கழகத்தின் துணை இயக்குனர் டாக்டர் ரமன் கங்காகேக்டர் தகவல் அளித்திருந்தார். இந்த நிலையில், மூல பொருட்களை ஏற்றுமதி செய்யாவிடில் இந்தியா கடும் விளைவுகளை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.