Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாழை தாருக்கு நடுவே மறைத்து… கேரளாவிற்கு கடத்தி சென்ற டிரைவர்… சோதனை சாவடியில் வைத்து கைது…!!

தேனி மாவட்டம் குமுளியில் கேரளாவிற்கு கஞ்சாவை கடத்தி சென்ற வேன் டிரைவரை போலீசாரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

ஊரடங்கு காலத்திலும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் தேனியில் உள்ள தமிழக-கேரள எல்லையான குமுளியில் தமிழ்நாடு மற்றும் கேரள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாலை கூடலூரில் இருந்து கேரளாவிற்கு வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற சரக்குவேனை குமுளி சோதனை சாவடியில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த வேனில் 7000 கிலோ வாழைத்தார்கள் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த வாழை தார்களுக்கு மத்தியில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தத்து. அதனை பார்த்த போலீசார் வாழை தார் நடுவே இருந்த  2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வேனை ஓட்டி வந்த மூங்கிலாறு பகுதியை சேர்ந்த மாணிக்கம்(23) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |