Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சட்டென பிரேக் அடித்த டிரைவர்…. பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே விழுந்த பெண்…. பரபரப்பு சம்பவம்….!!!!

பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து நெல்லிக்குப்பம் அருகே அதி வேகத்துடன் வந்து கொண்டிருந்தது.அப்போது திடீரென ஓட்டுனர் பிரேக் பிடித்ததால் பேருந்து உள்ளே படிக்கட்டு அருகே கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் ஒருவர் படிக்கட்டு வழியாக குழந்தையுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் .

அவரை உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தற்போது அவர் தனது குழந்தையுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |