ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆனந்தநாத் மாவட்டத்தில் தங்ப்வாரா எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தீவிரவாதிகளை தேடும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் ராணுவத்தில் கடுமையான முறையில் பயிற்சி பெற்ற ஜூம் எனும் நாய் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டிற்குள் நுழைந்தது.
அந்த நாயை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீவிரவாதிகள் நாயின் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஜூம் நாயின் மீது 2 குண்டுகள் பாய்ந்தது. இருப்பினும் ஜூம் அந்த தீவிரவாதிகளை விடாமல் அவர்களை கடித்து குதறி அவர்களை நிலைகுலைய செய்தது. அதில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜூம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. மேலும் தன்னுடைய தாய் நாட்டிற்காக உடம்பில் குண்டு பாய்ந்த போதிலும் அதை பெரிதாக எண்ணாமல் கடைசிவரை தீவிரவாதிகளுடன் போராடிய ஜூம் நாயை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.