பெல்ஜியம் துணை பிரதமர் மாஸ்க் அணிய திணறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
பெல்ஜியம் துணைப் பிரதமரான Koen Geens தையல் நிலையம் ஒன்றிற்கு 35000 துணியாலான மாஸ்க்குகளை தன்னார்வலர்கள் செய்து நாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். அங்கு அவருக்கும் மாஸ்க் கொடுக்கப்பட்டது. Koen Geens மாஸ்க்கை அணிய தெரியாமல் முதலில் நெற்றியில் அதனை அணிய அவரது காதுகளுக்குள் மாஸ்க் செல்லவில்லை.
பின்னர் கண்கள் மீது அணிந்து மூக்கையும் வாயையும் மாஸ்க்கை இழுத்து மூடியுள்ளார் அதற்குள் புகைப்படக்காரர்கள் அவர் மாஸ்க் போட திணறியதை புகைப்படம் மற்றும் காணொளியாக எடுத்து விட்டனர். சமூக ஊடகங்களில் அந்த காணொளி வெளியானதை தொடர்ந்து Koen Geens மாஸ்க் போட திணறியதை பலரும் கிண்டலடித்து வருகின்றனர்