செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது குறித்து எடப்பாடியார் ஏற்கனவே தெளிவாக பதில் சொன்னார். சட்டமன்றம் முடித்து வரும்போது என்று நினைக்கின்றேன்…. இதற்கு எந்த தீர்மானமும் வேண்டியதில்லை. எடப்பாடியார் கூறிய பதிலையே நானும் மீண்டும் திரும்ப கூறுகிறேன். மு.க ஸ்டாலின் நினைத்தால் உடனே துணை முதலமைச்சர் ஆக்கலாம். வாய்ப்பு அவரிடமே இருக்கிறது.
இவர்கள் எல்லாம் சேர்ந்து சொல்லி, ஸ்டாலின் செய்வது போல் ஒரு பாவனை காட்டுகிறார்கள். திமுக கட்சி பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டு, இன்றைக்கு இந்த கட்சி குடும்ப கட்சியாக மாறி இருக்கிறது என்று அம்மா சொல்லி இருக்கிறார்கள்.. தலைவர் சொல்லியிருக்கிறார்கள்…. எடப்பாடி அவர்கள் கூறியிருக்கிறார்கள்… அதுதான் உண்மை. எனவே அவருக்கு ( உதயநிதி ) இன்று திமுக கட்சியில் அவருடைய பங்கு என்ன ?
இந்த கட்சியில் அதிக நபர்கள் இருக்கிறார்கள். துரைமுருகன், நேரு, பொன்முடி இன்னும் அதிக தலைவர்கள், திமுக கஷ்டப்பட்ட காலத்தில் இருந்து துணை நின்ற தலைவர்கள் ஏராளமானோர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எல்லாம் வாய்ப்புகள் இல்லையா ? திமுக என்றால் இவர்களே தான் வரவேண்டுமா ? என்ற எடப்பாடியார் பதில் கூறினார். நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். சட்டமன்றத்திலும் சரி, அதேபோல எங்கு பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் புராணம் தான் பாடுகிறார்கள். மூத்த அமைச்சர்கள், கூட்டணி கட்சிகள் அனைத்தும் உதயநிதிக்காக பேசுகின்றனர் என தெரிவித்தார்.