மேகாலயா மாநிலத்தில் காட்டு காளான்களை சாப்பிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயா மாநிலம் மேற்கு ஜெயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் இருக்கும் லமின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயதான மோரிசன் தார், 26 வயதான கட்டிலியா கோங்லா.. இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள மலைக்குச் சென்று அங்கிருந்த காளான்களை பிடுங்கி எடுத்து வந்தனர். பின்னர் அதனை 2 குடும்பத்தினரும் சமைத்து சாப்பிட்டுள்ளனர்..
இதேபோல கட்டிலியாவும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பலியானார்.. இதையடுத்து இருவரது குடும்பத்தினரைச் சேர்ந்த 16 பேரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சிலர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்தசம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள மலைப் பகுதிக்கு யாரும் செல்லவேண்டாம் என்று காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.
காளான்களில் பல வகைகள் இருக்கின்றன.. காளான்கள் சாப்பிடலாம், ஆனால் அது விஷதன்மையுடையதா? இல்லையா? என்று நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.. ஆகவே யாரும் தெரியாமல் காட்டுப்பகுதியில் நிற்கும் காளான்களை சாப்பிடாதீர்கள்..