Categories
உலக செய்திகள்

ஃபான்ஃபோன் புயலுக்கு 47 பேர் பலி… மேலும் அதிகரிக்க வாய்ப்பு..!!

பிலிப்பைன்ஸில் வீசிய ‘ஃபான்ஃபோன்’ புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.

பிலிப்பைன்ஸில் வீசிய ‘ஃபான்ஃபோன்’ புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வீசிய இந்தப் புயலில், நாட்டின் பல்வேறு பகுதிகளை பாதிப்புக்குள்ளாகின. இந்த புயலானது மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதில் வீடுகளின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன. மின் கம்பங்கள் சரிந்தன.

41 dead after Christmas typhoon strikes central Philippines  பிலிப்பின்ஸில் வீசிய ஃபான்ஃபோன் புயல்

இந்தச் சம்பவங்களில் 28 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அலுவலர்கள் இருதினங்களுக்கு முன் கூறியிருந்த நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சேத விவரங்கள் தொடர்ந்து மதிப்பிடப்பட்டு வரும் நிலையில், இந்தப் புயலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன

Categories

Tech |