கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.33 லட்சத்தை தாண்டி உள்ளதால் உலகநாடுகள் அச்சத்தில் உள்ளன..
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 8 மாதங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு ஒரே வழி மருந்து கண்டுபிடிப்பது தான் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதற்கிடையே நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது.
இந்நிலையில் உலகம் முழுவதும் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது. கிட்டத்தட்ட 20, 009, 270 பேரை தொற்று பாதித்துள்ளது. இவர்களில் 12,900,625 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. 64,923 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.33 லட்சத்தை தாண்டி உள்ளதால் உலகநாடுகள் அச்சத்தில் உள்ளன..