Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் சிஆர்பிஎப் தலைமை மருத்துவருக்கும், எய்ம்ஸ் மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு!

டெல்லியின் சாகேத்தில் அமைத்துள்ள சிஆர்பிஎப்-ல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தலைமை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவர் ஏடிஜி மருத்துவமனையில் ஐசோலேஷன் வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக சிஆர்பிஎப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) உடலியல் துறையில் குடியுரிமை பெற்ற மருத்துவருக்கு கொரோனா நோய் தோற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு மேலும் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அந்த மருத்துவரின் குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |