அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொண்டர்களிடம் பேசும் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றி அண்ணா அவருடைய பிறந்தநாளில் தான் சொல்ல வேண்டும். அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்ற உடன் அவருக்கு ஒரு ஆறு மாதத்தில் புற்றுநோய் ஏற்பட்டுவிட்டது. அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்று விடுகிறார், சிகிச்சைக்கு சென்று அங்கு குணமடைந்து திரும்பி வந்து சட்டமன்றத்தில் பேசுகிறார்.
அப்போது காங்கிரஸ் கட்சி உடைய உறுப்பினர்கள் நீங்கள் அமெரிக்கா வரைக்கும் சென்று வந்து உயர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறீர்கள், இதற்கு பணம் எது ? யார் கொடுத்தார் ? இது அரசாங்க பணமா ? அல்லது திமுக கட்சியினுடைய பணமா? அல்லது யார் கொடுத்தார்களா ? எப்படி வந்தது ? இவளவு காசு எப்படி செலவழிசீங்க ? என்று முதலமைச்சர் அண்ணாவிடம் கேட்கிறார்கள்.
அப்போது அண்ணா என்ன சொன்னார், இதற்கு விடையை நாளை சொல்கிறேன் என்று சொல்லி உட்கார்ந்து விட்டார். அதற்கு மறுநாள் வருகிறது. நீங்கள் சொன்னீர்களே விடை சொல்வீர்கள் என்று என்ன ஆச்சு ? பணம் ஏது என்று கேட்கிறார்கள் ? அப்போது அண்ணா சொல்கிறார், எனக்கு இந்த பணத்தை நான் சார்ந்திருக்கின்ற தலைமையில் இருக்கின்ற திமுக கட்சியும் கொடுக்கவில்லை, அரசாங்க பணத்தை எடுத்தும் கொடுக்கவில்லை.
வேறு யாரிடமும் நான் கேட்கவில்லை, கேட்காமலே என்னுடைய மருத்துவ செலவை அனைத்தையும் என்னுடைய தம்பி எம்.ஜி. ராமச்சந்திரன் ஏற்றுக் கொண்டு விட்டார். நேற்று அவர் சபைக்கு வரவில்லை, அவரை அமர்த்தி, அவர் இருக்கின்ற போதுதான் இந்த விவரத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக தான் நான் மறுநாள் சொல்லுகிறேன் என்று சொன்னேன். இதோ இருக்கின்ற எம்.ஜி. ராமச்சந்திரன், என் அன்பு சகோதரர் பரங்கிமலை சட்டமன்ற உறுப்பினர்,
திரைப்பட நடிகர் எம்.ஜி.ஆர் என் செலவை அத்தனையும் கொடுத்துவிட்டார், யாரிடத்திலும் அவர்தான் கொடுத்தார் என்ற விஷயத்தை இன்று வரை செல்லவில்லை, நான் சட்டமன்றத்திலே இப்போது வெளிப்படையாக சொல்கிறேன் என்று சொன்னார். கரவொலி ஜெயின் ஜார்ஜ் கோட்டை தாண்டி கடற்கரை வரைக்கும் கேட்டது, அப்படிப்பட்ட தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என பெருமை கொண்டார்.