Categories
உலக செய்திகள்

“பயணத்தில் கொரோனா” சிகிச்சை செலவு எங்களது….. எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு….!!

துபாயில் விமான பயணத்தின் போது யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்வதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவின் ஹூகான் மகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கொரோனா பாதிப்பால் மிகப்பெரிய அளவில் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களின் பயணமானது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காகவும், அவசியமான காரணங்களுக்காகவும் மட்டுமே மக்கள் தற்போது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், வேலைக்காக வெளிமாநிலங்கள், நாடுகளுக்குச் சென்றவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான பயண வசதிகள் எப்போதும் போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி உலகம் முழுவதும் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு விமான சேவை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் துபாயில் விமான பயணத்தின் போது கொரோனாவால் பாதிக்கப்படும் பயணிகளுக்கான சிகிச்சை செலவை முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு அவர்கள் தனிமைப்படுத்தப்படும் 14 நாட்களுக்கு ஆகும் செலவான 8291 ரூபாயும் அந்த நபர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் இந்த சேவை மனப்பான்மைக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

 

Categories

Tech |