Categories
உலக செய்திகள்

கொரோனா நம்மோடு எப்போதும் இருக்கும்… அதனைக் கட்டுப்படுத்துவதே ஒரே வழி… விலங்கியல் வல்லுனர் அதிர்ச்சித் தகவல்…!

விலங்கியல் வல்லுனர் பீட்டர் டஸ்ஸாக், கொரோனா நம்மோடு எப்போதும் இருக்கும் என்றும், அதனைக் கட்டுப் படுத்துவதற்கு தடுப்பு மருந்துகளை புதுப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவானதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. கொரானா எப்படி உருவானது என்பதை ஆராய்வதற்காக சீனாவின் குழு  வூஹான் நகருக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற விலங்கியல் நிபுணரும் விலங்குகள் வல்லுனருமான பீட்டர் டஸ்ஸாக் வௌவால் குகையில் இருந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் வைரஸ் பற்றிய புதிய தகவல் கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, நாங்கள் வைரஸ் பற்றிய புதிய தகவல்களை கண்டுபிடித்துள்ளோம். அதனைக் கண்டு பிடிப்பதற்கான சரியான பாதையில் தான் செல்கிறோம். கடந்த 2002ஆம் ஆண்டு யுனான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குகைகளில் வாழும் வௌவ்வால்களிடம் இருந்து சார்லஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் பரவிய தகவல் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் கொரானா வைரஸ் எங்கிருந்து வந்திருக்கும் என்பதை கண்டறிந்தாளும், வைரஸின் புதிய மரபணு மாற்றங்கள் என்றும் நிலைத்திருக்கும். மனிதர்களுக்கு பெரும்தொற்றாக மாறி இருக்கும் கொரோனா நம்மிடம் எப்போதும் இருக்கும். அதனைக் கட்டுப்படுத்துவது ஒன்றே நமது தற்போதைய பணி. அதற்காக தடுப்பு மருந்துகளை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |