அமெரிக்க பிரதிநிதிகள் தைவான் நாட்டிற்கு வருகை தந்திருந்த நிலையில் தைவான் வான் எல்லைக்குள் சீன விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தைவான் நாட்டிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் 5 பேர் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக எரிச்சலில் இருந்த சீனா 27 போர் விமானங்களை நேற்று தைவான் ஜலசந்தியை கடந்து அந்நாட்டின் வான் எல்லைக்குள் பறக்க விட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றும், தைவான் நாட்டிற்குள் அமெரிக்க பிரதிநிதிகளின் வருகையானது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளது.