Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இந்தியாவில் அறிமுகமாகும் ஃப்ளீட்ஸ் – ட்விட்டர் அறிவிப்பு…!!

ட்விட்டரில் ஃப்ளீட்ஸ் (fleets) என்ற புதிய வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து ட்விட்டர் நிறுவனம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ஃப்ளீட்ஸ் என்ற புதிய வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்யப் போகிறோம். இந்த புதிய வசதி இன்னும் சில நாள்களிலேயே  பயன்பாட்டிற்கு வரும். இந்த வசதி தற்போது பரிசோதனை ஓட்டத்தில் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிலுள்ள ‘ஸ்டோரி’ வசதியை போன்றே இந்த ஃப்ளீட்ஸ் பயன்படும். இதில் செயப்படும் பதிவுகளை லைக், ஷேர் மற்றும் ரீ-ட்வீட் செய்ய முடியாது. தனிப்பட்ட முறையில் மெசேஜ் மட்டுமே செய்ய முடியும்.

https://twitter.com/TwitterIndia/status/1270358114072592387

Categories

Tech |