Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

200 நபர்க்கு மேல் போட வேண்டும்…. சிறப்பாக நடைபெற்ற ஆய்வு கூட்டம்…. கலெக்டரின் தகவல்….!!

நாளொன்றுக்கு 200 நபர்களுக்கு அதிகமாக தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் சிறப்பாக நடந்து வருகின்றது.

இதில் இம்மாவட்டம் 100 % கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட்டமாக இருக்க உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் முழுமையாக ஈடுபட்டு தடுப்பூசிப் போடும் பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் இம்மாவட்டத்தில் இருக்கும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் நாளொன்றுக்கு குறைந்தபட்சமாக 200 நபர்களுக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |