ஆப்கானிஸ்தானுக்கு 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை சீன அரசு நன்கொடையாக அளித்துள்ளது. மேலும் காபூல் விமான நிலையம் வந்தடைந்த கொரோனா தடுப்பூசிகளை ஆப்கான் சுகாதாரத்துறை அமைச்சர் ஓமரிடம் சீன தூதர் வாங் யூ வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஆப்கான் சுகாதாரத்துறை அமைச்சர் ஓமர் போர் தொடுப்பதற்காக தங்கள் நாட்டை நோக்கி டாங்கிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் வந்த நாடுகள் தங்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவவும் முன்வர வேண்டும் என்று பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.