வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, கட்டிமுடித்த கட்டிடங்களை திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தைச் சேர்ந்த கரிகிரி ஊராட்சியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் 40 கோடி ரூபாய் மதிக்கத்தக்க 400 வீடுகள் அடங்கிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்றவற்றிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, 40 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
மேலும் வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் 18,589 பேருக்கு மொத்தம் 169 கோடியே 77 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். முதலமைச்சர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது, தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.